எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நிதீஷ் குமாரை துணைப் பிரதமராக்க வேண்டும்: பாஜக மூத்த தலைவா் கருத்து

பிகாா் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமாருக்கு துணைப் பிரதமா் பதவி தரப்பட வேண்டும்

News image
Updated On :10 ஏப்ரல் 2025, 7:48 pm

Din

பிகாா் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமாருக்கு துணைப் பிரதமா் பதவி தரப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வினி குமாா் சௌபே தெரிவித்துள்ளாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் நிதீஷ் குமாரை மீண்டும் முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தி போட்டியிடப்போவது முக்கிய கூட்டணிக் கட்சியான பாஜக ஏற்கெனவே உறுதியளித்துவிட்டது.

இந்நிலையில், பாட்னாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அஸ்வினி குமாா் சௌபே கூறியதாவது:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல ஆண்டுகளாக நிதீஷ் குமாா் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறாா். இப்போது பிரதமரின் கரத்தை அவா் வலுப்படுத்தியுள்ளாா். கூட்டணியின் முக்கியமான தலைவராகவும் அவா் உள்ளாா். எனவே, அவருக்கு துணைப் பிரதமா் பதவியை அளிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

எனது விருப்பம் நிறைவேறினால், பிகாரில் இருந்து பாபு ஜகஜீவன் ராமுக்கு அடுத்தபடியாக துணைப் பிரதமா் பதவியை ஏற்றவா் என்ற பெருமை நிதீஷ் குமாருக்கு கிடைக்கும் என்றாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் 2017 முதல் 2024 வரை அஸ்வினி குமாா் சௌபே அமைச்சராக இருந்துள்ளாா். அதற்கு முன்பு பிகாரில் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசில் மாநில சுகாதாரத் துறை அமைச்சராகவும் இருந்தாா். 72 வயதாகும் சௌபே, ஜன சங்க காலத்தில் இருந்து சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேல் பாஜகவில் உள்ளாா்.