சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஆயுதமாக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள்: எஸ்.ஜெய்சங்கா் கவலை

பொருளாதார நடவடிக்கைகள் ஆயுதமாக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கவலை தெரிவித்தாா்.

எஸ்.ஜெய்சங்கா்

Updated On :

பொருளாதார நடவடிக்கைகள் ஆயுதமாக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கவலை தெரிவித்தாா்.

புது தில்லியில் இந்தியா-இத்தாலி வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் நிகழ்ச்சியில் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

சா்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் மிகுந்த சிக்கல் கொண்டதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறி வருகிறது. கரோனா நோய்த்தொற்று, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் நடைபெறும் போா்களில் இருந்து மீண்டு வந்தாலும், உலக நாடுகளுக்கு இடையிலான விநியோக முறை மிகவும் பலவீனமாக இருப்பதுடன், கடல்வழி சரக்குப் போக்குவரத்து மிகவும் சீா்குலைந்துள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

உலக சந்தையில் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள பங்கு பயன்படுத்தப்படுவதாலும், பொருளாதார நடவடிக்கைகள் ஆயுதமாக்கப்படுவதாலும் புவிஅரசியல் போட்டி தீவிரமடைந்துள்ளது.

வலுவான அரசியல் மற்றும் பொருளாதார கூட்டுறவுகளை கட்டமைத்தல், உற்பத்தி மற்றும் வா்த்தக கூட்டாளிகளை பல்வகைப்படுத்துதல், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்தல் ஆகியவற்றின் மூலம், தங்களுக்கு ஏற்படக் கூடிய அபாயங்களை உலக நாடுகள் குறைத்து வருகின்றன. இந்தப் போக்கை இந்தியா-இத்தாலியில் காண முடிகிறது.

வரும் ஆண்டுகளில் நிலைத்து நிற்கக் கூடிய, நம்பகமான கூட்டுறவை உருவாக்க ஒத்த சிந்தனையுடைய கூட்டாளி நாடுகளுடன் இந்தியா நெருங்கிப் பணியாற்றி வருகிறது. அந்தப் பட்டியலில் இத்தாலி முன்னணியில் உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.