வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அம்பேத்கரின் போராட்டங்கள் நம்மை வழிநடத்தும்: ராகுல்

அம்பேத்கரின் பிறந்த நாளில் ராகுல் காந்தியின் பதிவு..

News image
Updated On :14 ஏப்ரல் 2025, 5:47 am

DIN

அம்பேத்கரின் போராட்டங்கள் நம்மை வழிநடத்தும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், ஒவ்வொரு இந்தியரின் சம உரிமைகளுக்காகவும், ஒவ்வொரு பிரிவினரின் பங்கேற்புக்காகவும் அம்பேத்கர் ஆற்றிய போராட்டமும் பங்களிப்பும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் எப்போதும் நம்மை வழிநடத்தும் என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில்,

”இந்திய விடுதலைக்குக் காரணமான, அனைத்து இந்தியர்களின் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காகப் போராடிய நமது உத்வேகத்துக்குக் காரணமான, நாட்டின் கட்டுமானத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய சிறந்த தொலைநோக்கு பார்வையாளரான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி - பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளில், அவருக்கு எங்கள் மிகவும் பணிவான அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.