
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக, பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கி வந்த பஹல்காம், தற்போது அச்சுறுத்தப்படும் பகுதியாக இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காஷ்மீரில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வெளியேறி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, 4,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வரும்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியாவும், இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன.
இதனிடையே, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.