பிகார் மாநிலம் பாட்னா மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநில தலைநகர் பாட்னாவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று (ஏப்.25) அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைப்பட்டு அந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்தச் சோதனையின் முடிவில், நீதிமன்ற வளாகத்தில் எந்தவொரு சந்தேகப்படும்படியான பொருளும் கிடைக்காததினால், இந்த மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து, காவல் துறை உயர் அதிகாரி தீக்ஷா கூறுகையில், பாட்னா சிவில் நீதிமன்றத்தினுள் நீதிபதியின் இருக்கைக்கு மிக அருகில் ஆர்.டி.எக்ஸ். எனும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலமாக மர்ம நபரின் மிரட்டல் போலியானது என கண்டறியப்பட்டு, அந்த மர்ம நபரைப் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மின்னஞ்சல் மூலம் 3 ஆண்டுகளாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென்பொறியாளா் கைது!

நொய்டா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் தீவிர சோதனை

வேலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை

திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



