யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ரூ.1 லட்சம்! அரசு அதிரடி அறிவிப்பு!

சத்தீஸ்கரில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு மேயர் நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்க அம்மாநிலத்திலுள்ள அனைத்து நகராட்சி ஆணையர்களுக்கும் முதல்வர் விஷ்ணு தியோ சாய்யின் அறுவுறுத்தலின்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, 2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 5 தேர்வர்கள் தேர்ச்சிப் பெற்று வெற்றியடைந்துள்ளனர்.

அதில், ராய்ப்பூரைச் சேர்ந்த பூர்வா அகர்வால் (65வது இடம்), முங்கேலியின் அர்பன் சோப்ரா (313 வது இடம்), ஜக்தாபூரின் மான்சி ஜெயின் (444வது இடம்), அமிபிகாபூரின் கேஷவ் கார்க் (496வது இடம்) மற்றும் சாச்சி ஜெய்ஸ்வால் (654 வது இடம்) ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், மேல் கூறப்பட்டுள்ள தேர்வர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் முயற்சியாக யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப் பெறும் தேர்வர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com