
ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின் கட்டணம் அதிகபட்சமாக 80 சதவீதம் வரையிலும், வெளிநாட்டு விமான சேவைகளின் கட்டணம் 65 சதவீதம் வரையிலும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
தில்லி - மும்பை, தில்லி - பெங்களூரு, மும்பை - கோவா ஆகிய வழித்தடங்களில் ஜூலையுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட்டில் விமான டிக்கெட் கட்டணம் 40 - 60 சதவீதம் உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
தில்லி - மும்பை விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ. 5,000 என்ற நிலையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் விற்கப்படும். ஆனால் இந்த ஆகஸ்ட்டில் ஒரு டிக்கெட் விலை ரூ. 8,000 வரை அதிகரித்துள்ளது. இது ஆக. 7 - 18 வரையிலான காலக்கட்ட நிலவரம்.
தில்லி - பெங்களூரு டிக்கெட்டும் ரூ. 9,000 வரை உயர்ந்துள்ளது. இது வழக்கத்தைவிட 50 சதவீதம் அதிகம்.
சர்வதேச வழித்தடங்களில், தென்கிழக்காசிய மற்றும் அரபு நாடுகளுக்கு விமான டிக்கெட் விலை விண்ணை முட்டியுள்ளது. தில்லி - துபை, கொச்சி - துபை, மும்பை - துபை வழித்தடங்களில் விமான டிக்கெட் வழக்கமாக ரூ. 16,000 வரை இருக்கும் நிலையில், தற்போது ரூ. 24,000 வரை - அதாவது 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.