ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

அரசு ஆசிரியர் நியமனத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என பிகார் முதல்வர் அறிவிப்பு..
pension hike move as good news
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பிடிஐ
Published on
Updated on
1 min read

பிகார் மாநிலத்தில் இனி அரசு ஆசிரியர்கள் நியமனங்களில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், பிகார் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை காலை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். கல்வியை வலுப்படுத்துவதற்காக பெருமளவிலான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஆசிரியர் நியமனங்களில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தொடர்புடைய விதிகளில் திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த நியமனம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

முதலில் அரசு நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் பிகார் மாநில பெண்களுக்கே முழுமையாக அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஒப்பந்த உடற்கல்வி ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், காவலர்களுக்கான ஊதியம் இரட்டிப்பாக்கப்பட்டது.

Summary

Biharis will be given priority in teacher recruitment: Nitish Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com