
சத்தீஸ்கரில் நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டு வெடித்ததில், 24 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பிஜப்பூர் மாவட்டத்தின், குஞ்சேபார்தி கிராமத்தின் அருகில், பிரமோத் காக்கேம் (வயது 24) எனும் இளைஞர் ஒருவர், இன்று (ஆக.5) காலை 8 மணியளவில் அங்குள்ள ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு நக்சல்கள் பொருத்தியிருந்த ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டை அவர் அறியாமல் தொட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த வெடிகுண்டானது தூண்டப்பட்டு வெடித்ததில் அவரது கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரை உடனடியாக மீட்ட கிராமவாசிகள் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்து, உசூரில் உள்ள சமூதாய சுகாதார மையத்தில் அனுமதித்தனர்.
இதேபோல், நேற்று (ஆக.4) உசூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட புஜாரிகன்கர் கிராமத்தின் வனப்பகுதியில், மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 50 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்தார்.
முன்னதாக, நிகழாண்டில் (2025) பஸ்தார் பகுதியில் அமைந்துள்ள பிஜப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நக்சல்களின் தாக்குதலில் தற்போது வரை 27 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.