

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற பணிகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு, இன்று (டிச. 5) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், நீதிமன்ற பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தகவலறிந்து அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் நீதிமன்றத்தின் வளாகம் முழுவதும் சோதனைகள் மேற்கொண்டனர்.
இந்தச் சோதனைகளின் முடிவில் சந்தேகப்படும்படி எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
முன்னதாக, ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு நேற்று (டிச. 4) வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. ஏற்கெனவே, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு கடந்த நவம்பர் மாதம் போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: துபை-ஹைதராபாத் எமிரேட்ஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.