

துபை-ஹைதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
துபையில் இருந்து ஹைதராபாத்துக்கு EK-526என்ற எமிரேட்ஸ் விமானம் இன்று காலை புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக விமான நிறுவனத்திற்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.
இதையடுத்து, விமான நிலையத்தில் மிகவும் பாதுகாப்புடன் காலை 8.30 மணிக்கு தரையிறக்கப்பட்டது. அதன்பின்னர், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கினர்.
பின்னர், விமானத்தைத் தனிமைப்படுத்துதல், பயணிகளைப் பரிசோதித்தல், தீயணைப்பு இயந்திரங்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல் மற்றும் மோப்ப நாய்களை சேவையில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட நெறிமுறைகள் மேற்கொண்டனர்.
தீவிர சோதனைக்குப் பின்னர் எந்தவித வெடிபொருள்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.
முன்னதாக நேற்று மதீனா-ஹைதராபாத் அகமதாபாத் விமான நிலையத்திற்கு இருமுறை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக அந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
இதையும் படிக்க: நாட்டில் 400க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.