

ஒடிசாவில், 18 மாதங்களில் மட்டும் பல்வேறு காரணங்களால் 136 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக, வனத்துறை அமைச்சர் கணேஷ் ராம் சிங்குந்தியா தெரிவித்துள்ளார்.
ஒடிசா சட்டப்பேரவையில், கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த வனத்துறை அமைச்சர் கணேஷ் ராம் சிங்குந்தியா, கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரையிலான 18 மாதங்களில் மின்சாரம் பாய்ந்து, வேட்டை, தொற்று நோய் மற்றும் விபத்து ஆகிய காரணங்களால் 136 காட்டு யானைகள் பலியானதாகத் தெரிவித்துள்ளார்.
இதில், 42 யானைகள் மின்சாரம் பாய்ந்தும், 31 யானைகள் தொற்று நோய் பரவலினாலும், 4 யானைகள் ரயில் விபத்துகளிலும் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 31 யானைகள் இயற்கையாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 4 யானைகள் மனிதன் - வனவிலங்கு மோதல்களினாலும், 4 யானைகள் வேட்டைக்காரர்களாலும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சுமார் 20 யானைகளின் மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், யானைகளின் மரணங்களுக்கு காரணமான சுமார் 92 பேர் கைது செய்யப்பட்டு அவர்களது வழக்குகள் குறித்த விசாரணை நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதாக, ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சாவர்க்கரின் கவிதை விழா! அமித் ஷா அந்தமான் பயணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.