

சாவர்க்கரின் கவிதை விழாவில் கலந்துகொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விநாயக் தாமோதர் சாவர்க்கர் எழுதிய பிரபல ‘சாகர பிரான் தலமாலா’ எனும் கவிதையின் 116 ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டி நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், வரும் டிச.11 ஆம் தேதி அமைச்சர் அமித் ஷா அந்தமானுக்கு வருகை தருவதாகவும், டிச.12 ஆம் தேதி பியோத்னாபாதில் சாவர்க்கரின் சிலையைத் திறந்து வைக்கவுள்ளதாகவும், அந்தமான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ விஜயபுரத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழிநுட்ப நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாவர்க்கர் குறித்த பாடல் ஒன்றையும் வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது பயணத்திட்டம் குறித்த இறுதி அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, அந்தமான் தீவில் உள்ள காலா பானி சிறைச்சாலையில் கடந்த 1911 ஆம் ஆண்டு விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களால் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இந்தியா கூட்டணி சமர்ப்பிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.