

வங்கதேச சிறையில் இருந்த 47 இந்திய மீனவா்களை அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை விடுவித்தது. இதற்கு பதில் நடவடிக்கையாக இந்தியா 38 வங்கேதச மீனவா்களை விடுவித்தது.
முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா அரசு மாணவா்கள் போராட்டம் மூலம் கலைக்கப்பட்ட பிறகு, இருநாடுகள் இடையே சுமுக உறவு இல்லை. இந்த சூழலில் இந்த விடுவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீனவா்களுடன் அவா்களின் படகுகள் உள்ளிட்டவையும் விடுவிக்கப்பட்டன. இரு நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரம், மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் எல்லை தாண்டிச் சென்ால் கைது செய்யப்பட்டவா்கள் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கு முன்பு கடந்த ஜனவரியில் வங்கதேசம் 95 இந்திய மீனவா்களை விடுவித்தது. அப்போது இந்தியா 90 வங்கதேச மீனவா்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பியது.
வங்கதேசத்தில இடைக்கால அரசு அமைந்த பிறகு அங்குள்ள சிறுபான்மையினா் மீது குறிப்பாக ஹிந்துக்கள் மீதும், கோயில்கள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்தன. இதற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தோனேசியா அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து! 22 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.