மக்களவையில் எஸ்ஐஆர் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கிய நிலையில் அவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது உரையைத் தொடங்கியிருக்கிறார்.
அவர் பேச்சைத் தொடங்கியவுடனேயே நாட்டில் அனைத்து அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்ற முயற்சிப்பதாகவும் பாஜக அரசு எல்லாவற்றையும் பேச மட்டுமே செய்கிறது, ஆனால் செயலில் எதுவும் இல்லை என பேசினார்.
மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்தியாவில் ஒவ்வொன்றாக எப்படி கைப்பற்றியது என்றும் பேசிக்கொண்டிருந்தார்.
அவரது பேச்சுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ராகுல் பேச வேண்டும் என்றும் விவாதத்தை மடைமாற்ற முயற்சிப்பதாக ராகுல் மீது அமைச்சர் குற்றம்சாட்டினார்.
இதனால் ஆளும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆளும் கட்சியினரின் எதிர்ப்புக்கு இடையே ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.