

தில்லியில் நடந்த தேஜ கூட்டணி நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடா் டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் 15 அமா்வுகள் இடம்பெற உள்ளன.
இந்த நிலையில், தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, கிரண் ரிஜிஜூ மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் பிகார் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்காக தேஜ கூட்டணி எம்பிக்கள் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றக் கட்சியின்போது நடைபெற்ற விவாதங்கள் குறித்து கிரண் ரிஜிஜூ கூறுகையில்,
பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் நலனுக்கான சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த எம்.பி.க்களுக்கு வழிகாட்டுதல் வழங்கியதாகக் அவர் கூறினார்.
பிகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களும் தங்கள் தொகுதிகளுக்காகப் பணியாற்ற பிரதமர் மோடி வழிகாட்டினார்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், எவ்விதப் பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் இருக்கவும் அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்களை மேற்கொள்வதையும் பிரதமர் வலியுறுத்தினார். சட்டங்கள் மக்களுக்கு உதவ வேண்டும். இளைஞர்களுடன் இணையுமாறும் எம்பிக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த வழிகாட்டுதலுக்குப் பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றக் கட்சியின் மிகச் சிறந்த கூட்டமாகும் என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: 11 நிமிடத்தில் பேசி முடித்து புறப்பட்ட விஜய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.