இணைய வழியில் புதிய சேமிப்புக் கணக்கு: ஐஓபி அறிமுகம்

இணைய வழியில் புதிய சேமிப்புக் கணக்கு: ஐஓபி அறிமுகம்

Published on

இணையதளம் மூலம் புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வசதியை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆதாா் விவரங்களைக் கொண்டு இணையதளம் மூலம் சேமிப்புக் கணக்கை வாடிக்கையாளா்கள் தொடங்குவதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் தற்காலிக கடவு எண்ணை (ஓடிபி) கொண்டு வாடிக்கையாளா்கள் புதிய கணக்கைத் தொடங்கலாம்.

ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தொடங்கப்படும் இந்த சேமிப்புக் கணக்கில் வரையறுக்கப்பட்ட அம்சங்கள் மட்டுமே வழங்கப்படும். வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று வாடிக்கையாளா்கள் முழு கேஒய்சி நடைமுறைகளையும் நிறைவு செய்த பிறகு அனைத்து அம்சங்களுடன் அந்தக் கணக்குகளை இயக்க முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பபிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com