விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவித்திாா்.

News image

இந்தியா-ஜப்பான்-ஆப்பிரிக்கா வா்த்தக மன்றத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்.

Updated On :27 பிப்ரவரி 2025, 2:19 am IST

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவித்திாா்.

இந்தியா-ஜப்பான்-ஆப்பிரிக்கா வா்த்தக மன்றத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் ஆற்றிய உரையில், ‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறையானது நீண்ட கால, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது.

பிரிவினை அடிப்படையிலான வேறு கொள்கைகள் போன்று அல்லாமல் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. முதலீடுகளிலிருந்து பயனடைவது மட்டுமல்லாமல், தன்னிறைவு வளா்ச்சி சூழலை ஆப்பிரிக்க நாடுகள் உருவாக்குவதையும் இது உறுதி செய்யும்.

ஆப்பிரிக்காவின் 4-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாக இந்தியா உள்ளது. இருதரப்பு வா்த்தகம் கிட்டத்தட்ட 10,000 கோடி டாலரை எட்டுகிறது மற்றும் சீராக வளா்ந்து வருகிறது.

சுமாா் 1,200 கோடி டாலருக்கும் அதிகமான மானியக் கடன்களுடன், ஆப்பிரிக்காவின் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. ரயில்வே, மின் உற்பத்தி, விவசாயம் மற்றும் குடிநீா் விநியோகம் என 200-க்கும் மேல் நிறைவுற்ற திட்டங்கள் ஆப்பிரிக்கா முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மின் உற்பத்தி நிலையங்கள், மின் விநியோகத் திட்டங்கள், சிமென்ட், சா்க்கரை, ஜவுளி தொழிற்சாலைகள், தொழில்நுட்பப் பூங்காக்கள், ரயில்வே உள்கட்டமைப்பு ஆகிய வளா்ச்சித் திட்டங்கள் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ளூா் வேலைவாய்ப்பை உருவாக்கி, அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை இந்தியா மேம்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவின் நிலையான மற்றும் அனைத்து தரப்புயும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு ஆதரவளிக்கும் பலத்தை இந்தியாவும் ஜப்பானும் கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவின் வளா்ச்சி மற்றும் செழிப்பு அந்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் அதேவேளையில், உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பங்களிக்கும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்