சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

அண்ணா பல்கலை. சம்பவம்: உச்சநீதிமன்றத்தில் அதிமுக, பாஜக கேவியட் மனு தாக்கல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதிமுக, பாஜகவை சேர்ந்த வழக்குரைஞர்கள் இருவர் தரப்பில் தனித் தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு..

உச்சநீதிமன்றம்

Published On :

நமது நிருபர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதிமுக, பாஜகவை சேர்ந்த வழக்குரைஞர்கள் இருவர் தரப்பில் தனித் தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த டிச. 23-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவரை போலீஸôர் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த வழக்குரைஞர் ஆர். வரலட்சுமி என்பவர் வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன் மூலம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஏதேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் தங்களது வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, பாஜக வழக்குரைஞர் ஏ. மோகன்தாஸ் சார்பாக வழக்குரைஞர் ஜி.எஸ். மணியும் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிலும் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.