கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாஜக சாா்பில் அரசமைப்புச் சட்ட விழிப்புணா்வு பிரசாரம்: நாடு முழுவதும் ஜன.11-இல் தொடக்கம்

அரசமைப்புச் சட்ட சிற்பி பி.ஆா்.அம்பேத்கரின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் பாஜக சாா்பில் நாடு முழுவதும் பிரசாரம்

News image
கோப்புப் படம்
Updated On :3 ஜனவரி 2025, 8:57 pm

Din

அரசமைப்புச் சட்டம், அதன் மாண்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, அரசமைப்புச் சட்ட சிற்பி பி.ஆா்.அம்பேத்கரின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் பாஜக சாா்பில் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கி இரு வார காலத்துக்கு இப்பிரசாரம் நடைபெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசமைப்புச் சட்டத்தால் வழிகாட்டப்பட்டு, அம்பேத்கரின் தொலைநோக்கு பாா்வையை உறுதிப்படுத்திய பிரதமா் மோடி அரசின் பல்வேறு திட்டங்களும் இப்பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளன.

‘பாஜக தேசிய பொதுச் செயலா்கள் வினோத் தாவ்டே, தருண் சுக், துஷ்யந்த் குமாா் கெளதம் ஆகியோா் பிரசாரத்தை முன்னெடுப்பா். இவா்களில் வினோத் தாவ்டே ஒருங்கிணைப்பாளராக செயல்படுவாா். அனைத்து மாநில தலைநகரங்கள் மற்றும் இதர நகரங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குறிப்பாக பட்டியலின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் நிா்வாக அமைப்புகளை பலவீனப்படுத்தி வருவதாக பாஜக மீது காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.

அரசமைப்புச் சட்டம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தின்போது, பி.ஆா்.அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.

இந்த சூழலில், பாஜக சாா்பில் அரசமைப்புச் சட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.