வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

விண்வெளியில் செடி வளர்ப்பு.. முளைவிட்ட காராமணி விதை: இஸ்ரோ சாதனை

விண்வெளியில் செடி வளர்ப்பு சோதனை, முளைவிட்டது காராமணி விதை

காராமணி விதை

Published On :

விண்வெளியில் தாவர வளர்ப்பு சோதனை முயற்சியில், விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும், முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கப்படுவதாகவும், முதலில் ஏழு நாள்களுக்குள் விதை முளைவிடுமென விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆச்சரியமடையும் வகையில் நான்கு நாள்களில் காராமணி விதை முளைத்திருப்பதாகவும் இஸ்ரோ கூறியிருக்கிறது.

விண்வெளியில் வேளாண்மை செய்ய முடியுமா என்பதை ஆராயும் வகையிலும், வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன் முயற்சியாகவும் இந்த சோதனையை இஸ்ரோ மேற்கொண்டு முதல்கட்ட வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது.

விண்வெளியில் செடி வளர்ப்புக்கான பரிசோதனை முயற்சி (CROPS)யாக, பிஎஸ்எல்வி-சி60 மூலம் ஏவப்பட்ட 24 செயற்கைக்கோள்களில் விஎஸ்எஸ்சி துணை செயற்கைக் கோளும் ஒன்று.

அதாவது, பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 24 சிறிய செயற்கைக்கோள்களில் CROPS எனப்படும் விஎஸ்எஸ்சி துணை செயற்கைக் கோளில், நுண் புவியீர்ப்புச் சூழலில் காராமணி விதைகள் வைத்து அனுப்பப்பட்டது. விண்வெளியில் அதன் வளர்ச்சியை ஐந்து முதல் ஏழு நாள்களுக்கு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலயில், மாத்திரை போல நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு காராமணி விதைகளைக் கொண்டிருக்கும் அந்த பெட்டகத்திலிருந்து ஒரு காராமணி விதை முளைவிட்டிருக்கும் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

ஸ்பேடெக்ஸ் திட்டம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆயவு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் டிசம்பர் 30ஆம் தேதி செலுத்தப்பட்டது.

இந்திய ஆய்வு மையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்படி, விண்ணுக்கு ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்து அனுப்பியிருக்கிறது. பிறகு, இந்த விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.