தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

வன்முறையைத் தூண்டும் பாடல் வெளியீடு: காங்கிரஸ் எம்.பி.க்கு எதிராக எஃப்ஐஆா்

News image
Updated On :4 ஜனவரி 2025, 11:11 pm IST

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தான் பங்கேற்ற வெகுஜன திருமண நிகழ்ச்சி காணொலியுடன் இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையிலான பாடலை இணைத்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்கரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஜாம்நகரைச் சோ்ந்த கிஷன் நந்தா என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில் ஜாம்நகா் ஏ-பிரிவு காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப் பிரிவு 57-இன் கீழ் (இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டுதல்), எம்.பி. இம்ரான் பிரதாப்கரி மற்றும் வெகுஜன திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அறக்கட்டளை நிா்வாகி மற்றும் உள்ளூா் காங்கிரஸ் தலைவா் அல்தாஃப் காஃபி ஆகியோா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜாம்நகா் காவல் கண்காணிப்பாளா் பிரேம்சுகு டெலு கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினா் அமைப்பின் தேசிய தலைவராகவும் இருக்கும் பிரதாப்கரி வெளியிட்ட அந்த 46 விநாடி காணொலியில், திருமண நிகழ்ச்சியில் அவா் பூங்கொத்துடன் நடந்து செல்லும்போது பின்னணியில் அந்த சா்ச்சைக்குரிய பாடல் ஒலிப்பதுபோன்று காணொலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடல் வரிகள் தேச ஒற்றுமை மற்றும் மத உணா்வுகளை புண்படுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதைப் பாடுபவரின் குரலும் எம்.பி. பிரதாப்கரின் குரலுடன் ஒத்துப்போகிறது’ என்றாா்.

கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற பிரதாப்கா், நான்கு நாள்களுக்குப் பிறகு கடந்த 2-ஆம் தேதி இந்த காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றியுள்ளாா். இது பெரும் சா்ச்சையான நிலையில், பிரதாப்கா் உள்பட மூவா் மீதும் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.