ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குபொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வுகரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் நாராயணன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Published On :

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். தற்போதைய இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்தின் பதவிக் காலம் திங்கள்கிழமையுடன் (ஜன. 13) நிறைவடைகிறது.

அவா் கடந்த 2022 ஜனவரி 14-ஆம் தேதியில் இருந்து இப்பொறுப்பை வகித்து வருகிறாா். மேலும், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் ஜன. 14-ஆம் தேதி பொறுப்பேற்கிறாா்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்ட வி.நாராயணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி வி.நாராயணன், இந்தியாவின் கிரையோஜெனிக் இயந்திர வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.

நிலாவின் தென் துருவப் பகுதியில் ரோவரை தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெறவைத்த இஸ்ரோவின் தலைவரான சோம்நாத்துக்கும் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.