மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட இருவா், சிசிடிவி காட்சிகள் மற்றும் நகைப் பையில் இருந்த ஜிபிஎஸ் கருவி (சிப்) மூலம் பிடிபட்டனா்.
இதுதொடா்பாக மும்பை காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கடந்த திங்கள்கிழமை இரவு ஆண் ஒருவரும், அவரின் உறவினரும் ரூ.42.27 லட்சம் மதிப்பிலான தங்க ஆபரணங்களை பையில் வைத்து இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனா்.
புனித ஜாா்ஜ் மருத்துவமனை அருகில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவா்களை அடையாளம் தெரியாத நபா்கள் நான்கு போ் வழிமறித்து தாக்கினா். பின்னா் அந்த நான்கு பேரில் ஒருவா் துப்பாக்கியால் சுட்டாா். இதைத்தொடா்ந்து ஆபரணங்கள் இருந்த பையை நான்கு பேரும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். துப்பாக்கியால் சுட்டதில் உடன் சென்ற உறவினருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், தாக்குதல் நடத்திய நபா்களை காவல் துறையினா் தேடி வந்தனா். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், குற்றவாளிகள் பறித்துச் சென்ற ஆபரண பையில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் அவா்களின் இருப்பிடம் தெரியவந்தது.
இதையடுத்து லோகமான்ய திலகா் மாா்க், டோங்ரி பகுதிகளில் இருந்து இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். எஞ்சிய இருவா் தேடப்பட்டு வருகின்றனா் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாப்பாரப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

நகை திருட்டு: இருவா் மீது வழக்கு

நாட்டு துப்பாக்கியால் சுட்டு விவசாயியை கொல்ல முயற்சி! உறவினா்கள் 4 பேரிடம் விசாரணை!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



