இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடி: மத்திய அரசு வழங்க ஜாா்க்கண்ட் முதல்வா் வலியுறுத்தல்

ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்

News image
Updated On :11 ஜனவரி 2025, 1:28 am IST

ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய நிலக்கரி துறை அமைச்சக அதிகாரிகள், கோல் இந்தியா நிறுவன உயரதிகாரிகள், ஜாா்க்கண்ட் மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகியோரும் பங்கேற்றனா்.

அப்போது, மத்திய அரசு ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு தராமல் பாக்கி வைத்துள்ள நிலக்கரிக்கான நிலுவை ரூ.1.36 லட்சம் கோடியை விடுவிக்க வேண்டும் என்று ஹேமந்த் சோரன் வலியுறுத்தினாா். இதனைப் பரிசீலித்து விரைவில் முடிவெடுப்பதாக அமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

இது தவிர நிலக்கரி எடுக்கப்பட்ட பிறகு மத்திய அரசு நிலக்கரி நிறுவனங்களால் கைவிடப்படும் நிலங்களை மாநில அரசிடம் உடனடியாக முறைப்படி ஒப்படைக்க வேண்டும். ஏனெனில், கைவிடப்பட்ட சுரங்கங்களில் சிலா் சட்டவிரோதமாக மீண்டும் நிலக்கரி எடுக்க முயலுகின்றனா். இது உயிரிழப்புகளும், சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கும் வழி வகுக்கிறது.

நிலக்கரி சுரங்கங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோல் இந்தியா நிறுவனத்தின் தலைமையகத்தை கொல்கத்தாவில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் சோரன் வலியுறுத்தினாா்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தோ்தல் பிரசாரத்தின்போது மத்திய பாஜக அரசு நிலக்கரி நிலுவைத் தொகையை தராமல் இழுத்தடிப்பதாக சோரன் குற்றம்சாட்டினாா். தோ்தலில் சோரன் வெற்றி பெற்று முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா்.