தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தில்லி ஜாட் இன மக்களுக்கு பாஜக துரோகம்: கேஜரிவால்

தில்லி ஜாட் இனத்தவர்களுக்கு பாஜக துரோகம் பற்றி..

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :13 ஜனவரி 2025, 10:30 am

DIN

இடஒதுக்கீடு விவகாரத்தில் தில்லி ஜாட் இனத்தவர்களுக்கு பாஜக துரோகம் இழைப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

வரும் பிப்ரவரி 5-ல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைநகரில் மும்முனை போட்டி நிலவி வருகின்றது. இந்த நிலையில் ஜாட் இன தலைவர்கள் குழு கேஜரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

இதுதொடர்பாக கேஜரிவால் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

தலைநகரில் உள்ள சில தொகுதிகளில், குறிப்பாக தில்லியின் வெளிப்புறப் பகுதிகளில் கணிசமான வாக்குகளை ஜாட் சமூகம் கொண்டுள்ளது. இந்த சமூகத்தினர் தில்லியின் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் மத்திய அரசின் பட்டியலில் அல்ல..

ராஜஸ்தானைச் சேர்ந்த ஜாட் இனத்தவர்கள் தில்லி பல்கலைக்கழகம் அதன் கல்லூரிகளில் சேர்க்கை பெறலாம், எய்ம்ஸ், சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் வேலைகள் பெறலாம், ஆனால் தில்லி ஜாட் இனத்தவர்கள் அவ்வாறு பெற இயலாது.

நாட்டின் முக்கிய இரு தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தில்லியில் உள்ள ஜாட் சமூகத்தினருக்கு மத்திய அளவில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தனர், ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

தன்னை சந்தித்த ஜாட் தலைவர்களின் பிரதிநிதிகள் கடந்த 10 ஆண்டுகளாக இடஒதுக்கீடு பிரச்னையில் பாஜக ஏமாற்றப்பட்டும் அநீதி இழைத்தும் வருவதாக தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். ஜாட் சமூகத்தினர் நியாயமான கோரிக்கையை ஆம் ஆத்மி ஆதரிக்கிறது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.