2025-இல் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சி: பிரதமர் சொன்ன விஷயம்!

தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுவதாகப் பிரதமர் பாராட்டு...
2025-இல் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சி: பிரதமர் சொன்ன விஷயம்!
PTI
Published on
Updated on
1 min read

2025-ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று(ஜன. 19) ஒலிபரப்பானது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் பேசினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 118-ஆவது பதிப்பில் பிரதமர் மோடி தமது உரையில், தேர்தல் ஆணையம் மக்கள் சக்தியை வலுப்படுத்த தொழில்நுட்ப ஆற்றலைப் பயன்படுத்தி வருவதாகவும், நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கான தம் பங்களிப்பையும் வெளிக்காட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜன. 25-ஆம் தேதி தேர்தல் ஆணைய நிறுவன நாளாகும். அன்றைய நாளானது, ‘தேசிய வாக்காளர்கள் நாளாகக்’ கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுவதாகப் பிரதமர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ANI

முன்னதாக தமது உரையைத் தொடங்கும் முன், “நமக்கு அரசமைப்பை வழங்கிவிட்டுச் சென்றுள்ள அனைத்து பெருமக்களையும் இந்நேரத்தில் நினைவுகூருவதாக” பிரதமர் குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து, டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி பேசினார் பிரதமர் மோடி.

மேலும், மகா கும்ப மேளா தொடங்கிவிட்டதாகவும், இவ்விழாவானது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருத்தை கொண்டாடுவதாய் அமைந்துள்ளதாகவும் சிலாகித்து பேசினார். “ஏழையோ செல்வந்தனோ, இச்சங்கம நிகழ்ச்சியில் அனைவரும் சமமே. தெற்கிலிருந்து வடக்கு வரை மக்களை ஒன்றிணைக்கிறது மகா கும்ப மேளா. இதில் இளையோர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். அந்த விதத்தில், கலாசாரத்துடன் இளையோர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது, தேசத்தை அது வலிமையாக்குகிறது’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com