கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு நீதி வேண்டும்; நிதி வேண்டாம் என பாதிக்கப்பட்ட மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மருத்துவரின் தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் இன்று (ஜன. 20) வெளியானது.
இதில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.
வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்ததாவது,
சிபிஐ அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் நல்ல தீர்ப்பு வழங்குவதாக வாழ்நாள் சிறையை நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிறப்பு புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்ட விசாரணையில் எங்களுக்கு ஏராளமான கேள்விகள் உள்ளன. நிதிக்காக நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை. எங்களுக்கு நீதி வேண்டுமே தவிர நிதி அல்ல. கொல்கத்தா காவல் துறையினர் செய்தது தவறு. இதனைத் தொடர்ந்து சிபிஐயும் சில விசாரணைகளைச் செய்தது. எங்கள் மகள் இறந்ததை விட அதிகமாக வலியை கொல்கத்தா காவல் துறையினரின் விசாரணை எங்களுக்குக் கொடுத்துவிட்டது என உருக்கமாகக் கூறினார்.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்திகரமாக இல்லை என முதல்வர் மமதா பானர்ஜியும் தெரிவித்திருந்தார். முன்னாள் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மாவும் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகனை தந்தை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!
தந்தை, தாய், தங்கையைக் கொன்ற வழக்கில் பெங்களூா் பெண் என்ஜினீயா் புதுச்சேரியில் கைது

கொல்கத்தா பாலியல் கொலை: எம்.எல்.ஏவான பிறகும் சட்டப்பேரவையில் அழுத பெண் மருத்துவரின் தாய்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



