தலைக்கு ரூ.1 கோடி.. நக்சல் தலைவர்.. சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் 14 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தலைக்கு ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்ட நக்சல் தளபதியும் கொலை செய்யப்பட்டார்.
நக்சல்கள் சுட்டுக்கொலை
நக்சல்கள் சுட்டுக்கொலைகோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட 14 நக்சலைட்டுகளில், தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்படிருந்த ராம் என்கிற சல்பதியும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்சல் அமைப்பினருக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நீடித்தது.

சத்தீஸ்கர் - ஒடிஸா எல்லையில் காரியாபந்த் மாவட்டத்தில் காவல்துறையினருடன் சிஆர்பிஎஃப், ஒடிசா சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து, திங்கள்கிழமை நள்ளிரவு முதல் சோதனை நடத்தினர். அப்போது நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அதிரடிப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இதில் இருக்கும் இடம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த மத்திய நக்சல்கள் குழு உறுப்பினரான ஜெயராம் உள்பட 14 -க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டதாக காரியாபந்த் காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொல்லப்பட்ட நக்சல்கள் வைத்திருந்த எஸ்.எல்.ஆர். ரைஃபிள் போன்ற தானியங்கி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டுக்குள் நக்சல்கள் இல்லாத நாடாக மாற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்த நிலையில், நக்சல் அமைப்புக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டை நக்சல்கள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான இலக்கை நோக்கி நமது வீரர்கள் வெற்றிநடை போடுகிறார்கள் என்று அமித் ஷாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜனவரி 16 ஆம் தேதி பிஜப்பூர் மாவட்டத்தில் 12 நக்சல்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com