ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நடுத்தரக் குடும்பங்களுக்கான தேர்தல் வாக்குறுதி: இன்று மதியம் ஆம் ஆத்மி வெளியீடு!

தில்லியில் பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதிய வாக்குறுதிகளை வெளியிடும் ஆம் ஆத்மி..

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :22 ஜனவரி 2025, 7:29 am

DIN

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி நடுத்தர வர்க்கத்தினரை மையப்படுத்தித் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.

ஆம் ஆத்மி கட்சி நடுத்தர குடும்பங்களுக்கான அறிக்கையை வெளியிடும் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று மதியம் அதை வெளியிடுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி முதல்வர் அதிஷியும், கேஜரிவாலும் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாஜக தலைவர் ரமேஷ் பிதுரி மற்றும் அவரது கூட்டாளிகள் ஆம் ஆத்மி கட்சியினருக்கு எதிராக போக்கிரித்தனம் செய்வதாக குற்றம் சாட்டினர்.

கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக "பயங்கரவாத" சூழலை உருவாக்கியதாகவும்,

இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

பிதுரியின் மருமகன்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஆம் ஆத்மி கட்சியினரை மிரட்டி

அவர்களின் காலரைப் பிடித்துக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்ட பிரசாரப் பொருள்களை எரித்தனர் என்று அவர் கூறினார்.

கல்காஜியில் இருந்து ராகேஷ் பிதுரி தேர்தலில் போட்டியிட்டதிலிருந்தே, கல்காஜி விதான் சபா பகுதியில் பாஜக ஒரு பயங்கரமான சூழலை உருவாக்கியுள்ளது.

கேஜரிவாலும் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு, அதிஷி விவரித்த நிகழ்வுகள் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு மட்டும் அல்ல. பா.ஜ.க.வினர் போக்கிரித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"எந்தக் கட்சியும் அமைதியான முறையில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்று பார்க்கும் போதுதான் வன்முறையில் ஈடுபடுகின்றனர். தில்லியில் பாஜக வரலாற்றுத் தோல்வியை நோக்கிச் செல்கிறது. ஒரு கட்சி மிக மோசமாகத் தோற்கும் என்பது வரலாற்றில் எழுதப்படும் என்று கேஜரிவால் கூறினார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் நடுத்தரக் குடும்பங்களுக்கான தேர்தல் வாக்குறுதியை ஆத் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.