அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடிகோப்புப் படம்

இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது: ஒமர்

இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்தார்.
Published on

இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

அமெரிக்க அதிபரின் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு குறித்து ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதாவது, ``அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடத்தை, இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது நன்றாக உள்ளது.

வரி உயர்வைப் பொறுத்தவரை, நம் நாடு இதுவரை அதில் சேர்க்கப்படவில்லை. டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்தபோதும், பிரதமர் மோடியுடனான உறவு நல்ல முறையில் இருந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’’ என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இருக்கை வழங்கப்பட்டதுடன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியேற்றவுடன், முதல் சந்திப்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் சந்திப்பே அமைந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com