யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாஜகவின் அனல் பறக்கும் 3வது தேர்தல் வாக்குறுதிகள்!

பாஜகவின் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் பற்றி..

News image
Updated On :25 ஜனவரி 2025, 10:51 am

DIN

தில்லியில் பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜகவின் மூன்றாவது தேர்தல் வாக்குறுதியை அக்கட்சியின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.

தலைநகரில் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-இல் நடைபெறவுள்ளதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார் என்ற போட்டி நிலவி வருகின்றது. நிகழவுள்ள பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில், பேரவைத் தேர்தலில் ஈடுபட்டுள்ள கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு செய்யப்போகின்றவற்றைப் பட்டியலிட்டு வருகின்றனர். ஏற்கனவே, இரண்டு பகுதிகளாகத் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பாஜக, இறுதிக்கட்ட தேர்தல் வாக்குறுதியை இன்று வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை அமித் ஷா வெளியிட்டார்.

பாஜக வெளியிடுவது வெற்று வாக்குறுதிகள் அல்ல, தில்லியில் செய்யவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுள்ளன.

யமுனையைச் சுத்தம் செய்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் மற்றும் தில்லியை மாசு இல்லாததாக மாற்றுதல் போன்ற வாக்குறுதிகளை கேஜரிவால் நிறைவேற்றவில்லை என்று ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்ததைப் போல ஊழல் அளவு ஒருபோதும் இருக்காது. சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.41,000 கோடி, ரயில் பாதைகள் அமைக்க ரூ.15,000 கோடி, தில்லியில் விமான நிலையத்திற்கு ரூ.21,000 கோடி செலவிட்டது.

ஏழைகளுக்கான எந்த நலத்திட்டங்களும் தில்லியில் நிறுத்தப்படாது, பாஜக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும்.

ஏழைகளுக்கான எந்த நலத்திட்டங்களும் தில்லியில் நிறுத்தப்படாது. 1,700 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புப் பகுதிகளை வாங்குதல், விற்றல் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட முழு உரிமைகளை வழங்கும். தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கும். அவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு, ரூ.5 லத்துக்குக்கான விபத்து காப்பீடு வழங்கும்.

50 ஆயிரம் அரசுப் பணியிடங்களை நிரப்பும், 20 லட்சம் சுயதொழில் செய்பவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். தில்லியில் ஆட்சி அமைத்தால் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்தும். ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும். முக்கியமாக பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும். ஆம் ஆத்மி போன்று பொய் வாக்குறுதிகளை பாஜக ஒருபோதும் அளிக்காது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.