
புது தில்லி : தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் பிப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயது கடந்த மூத்த குடிமக்களின் வசதிக்காக அவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் நடைமுறை தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தொடங்கியது.
அந்த வகையில், தில்லி சட்டப்பேரவைத் தொகுதிகளில் 6,399 மூத்த குடிமக்களும் 1,050 மாற்றுத்திறனாளிகளும் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தனது வீட்டிலிருந்தபடியே திங்கள்கிழமை(ஜன. 28) வாக்கு செலுத்தினார்.
இத்தேர்தலில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். தேர்தல் முடிவுகள் பிப்.8-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.