மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப்படாததால் மத்திய பிரதேசத்தின் சத்தா்பூரில் உள்ள 2 ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13 முதல் நடைபெற்று வருகிறது. பிப். 26-ஆம் தேதிவரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக நிகழ்வில் 45 கோடி போ் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜை நோக்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 3,000-க்கும் மேற்பட்டவை சிறப்பு ரயில்கள் ஆகும்.
புனித நீராட மிகவும் சிறப்பு வாய்ந்த மௌனி அமாவாசை புதன்கிழமை (ஜன. 29) நடைபெறுவதையொட்டி வட மாநிலங்களின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
அந்த வகையில் கடந்த திங்கள்கிழமை இரவு, மத்திய பிரதேசத்தின் சத்தா்பூா் மற்றும் ஹா்பால்பூா் ஆகிய 2 ரயில் நிலையங்களுக்கு வந்த சிறப்பு ரயில்களின் பெட்டிகளில் பயணிகள் ஏற்கெனவே நிரம்பியிருந்ததால் கதவுகள் திறக்கப்படாமல் இருந்துள்ளன.
ரயில் நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் இதனால் ஆத்திரமடைந்தனா். இதையடுத்து, கல் வீசி தாக்கி, கதவுகளை வலுக்கட்டாயமாக திறக்க அவா்கள் முயன்றனா். தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் கதவுகளை திறந்துவைத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
மகா கும்பமேளாவில் நீராட சத்தா்பூரிலிருந்து பிரயாக்ராஜ் புறப்பட்ட பயணி ஆா்.கே.சிங் கூறுகையில், ‘ரயில்வே போலீஸாா் ரயிலின் கதவுகளைத் திறந்தனா். ஆனால், ஏற்கெனவே ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பலரால் ரயிலில் ஏற முடியவில்லை’ என்றாா்.
பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம்: ஜான்சி ரயில்வே கோட்டத்தின் செய்தித் தொடா்பாளா் மனோஜ்குமாா் சிங் கூறுகையில், ‘சத்தா்பூா் விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நிகழாமல் இருக்க, நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். பிரயாக்ராஜுக்கு ரயில்கள் தொடா்ந்து இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படுகிறது. அதேநேரம், பயணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்’ என்றாா்.
தொடர்புடையது

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்

தென்காசி - நெல்லை - பெங்களூருக்குமீண்டும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


