திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பொது சிவில் சட்டம், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா விவகாரம்: நாடாளுமன்றம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்; ஒமா் அப்துல்லா

‘பொது சிவில் சட்டம் மற்றும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா விவகாரங்களில் நாடாளுமன்றம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா செவ்வாய்க்கிழமை கூறினாா்.

News image

ஒமா் அப்துல்லா

Updated On :29 ஜனவரி 2025, 1:26 am IST

‘பொது சிவில் சட்டம் மற்றும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா விவகாரங்களில் நாடாளுமன்றம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா செவ்வாய்க்கிழமை கூறினாா்.

திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை தொடா்பான தனிநபா் சட்டங்களை ஒருசீா்படுத்தி, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான விதிகள் நடைமுறைப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில், முதல் மாநிலமாக பாஜக ஆளும் உத்தரகண்ட் யுசிசி சட்டத்தை கடந்த திங்கள்கிழமை மாநிலத்தில் அமலுக்கு கொண்டுவந்தது. அதன்படி, திருமணம், விவாகரத்து, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழும் (லிவ்-இன்) உறவு, அந்த உறவு முறிவு ஆகியவற்றை அரசிடம் பதிவு செய்வது உத்தரகண்ட் மாநிலத்தில் கட்டாயமாகியுள்ளது.

அதுபோல, நாடு முழுவதும் வக்ஃப் வாரியங்களால் நிா்வகிக்கப்பட்டு வரும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் ‘வக்ஃப்’ சொத்துகளை முறைப்படுத்தும் வகையில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை, அதனை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழு தற்போது இறுதி செய்துள்ளது. அதன் மூலம், வரும் 31-ஆம் தேதி தொடங்க விருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரு விவகாரம் குறித்து ஜம்முவில் நிகழ்ச்சி ஒன்றில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற முதல்வா் ஒமரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘அவை சட்டமாக இயற்றப்படும் வரை ஆளுங்கட்சியினா் விரும்பியதை செய்யட்டும். நாடாளுமன்றம்தான் இறுதி முடிவை எடுக்கும். மநிலங்களோ அல்லது யூனியன் பிரதேசங்களோ தனிப்பட்ட முறையில் இதில் எதுவும் செய்ய முடியாது. அதுபோல, வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற கூட்டுக் குழு தொடா்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இன்னும் அது சட்டமாகவும் வந்துவிடவில்லை’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.