தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் கேஜரிவால் பதற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் தனித்தனியே மோதுகின்றன.
இந்த நிலையில், வடகிழக்கு தில்லி சட்டப்பேரவைக்கு உட்பட்ட கோண்டாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
“பிப்ரவரி 8 ஆம் தேதி தில்லியில் அமையவுள்ள பாஜக அரசு, அனைத்து வாக்குறுதிகளையும் குறிப்பிட்ட நாள்களில் நிறைவேற்றும். இதுவே மோடியின் வாக்குறுதி.
ஆம் ஆத்மியின் பொய்யான வாக்குறுதிகள் மக்களிடம் வேலை செய்யாது என்பது இங்கு கூடியுள்ள கூட்டத்தால் தெரிகின்றது. ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும், தில்லியை நவீனமயமாக்கும் இரட்டை என்ஜின் பாஜக அரசை மக்கள் விரும்புகிறார்கள். பிப். 5 ஆம் தேதி ஆம் ஆத்மி விலகி பாஜக வரும்.
தில்லியின் முன்னாள் முதல்வர் ஹரியாணா மக்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ஆம் ஆத்மி பதற்றமடைந்துள்ளது. ஹரியாணா மக்கள் தில்லி மக்களிடமிருந்து வேறுபட்டவர்களா? ஹரியாணா மக்களின் உறவினர்கள் தில்லியில் வசிக்கவில்லையா? தில்லி மக்கள் குடிக்கும் யமுனை ஆற்றில் எப்படி ஹரியாணா மக்கள் விஷம் கலப்பார்கள்? ஹரியாணா மக்கள் அனுப்பு தண்ணீரைதான் பிரதமர், நீதிபதிகள் உள்பட அனைவரும் குடிக்கிறோம்.
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியின் 25 ஆண்டுகால ஆட்சியை நீங்கள் பார்த்துவிட்டீர்கள். இரண்டு தலைமுறையை அழித்துள்ளனர். இன்னும் போக்குவரத்து நெரிசல், வெள்ளம், காற்றுமாசு இருக்கின்றது. உங்களின் ஒரு வாக்கு அனைத்தையும் மாற்றிவிடும். 11 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ள பணிகளையும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான பணிகளையும் நாங்கள் செய்யவுள்ளோம். ஒருமுறை தாமரைக்கு வாய்ப்பு அளியுங்கள்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடி

ஆந்திரத்தில் ரூ. 5,000 கோடி விமான நிலையத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

மக்களைக் கடவுளாகவும், ஜனநாயகத்தை கோயிலாகவும் கருதி பணியாற்றும் பிரதமர்: தில்லி முதல்வர்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



