தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் 2 ஐபோன்கள் திருட்டு!

திருமண நிகழ்வில் பங்கேற்றபோது குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வாலின் இரண்டு மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ளன.

News image
குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால்.
Updated On :30 ஜனவரி 2025, 10:21 am

DIN

திருமண நிகழ்வில் பங்கேற்றபோது குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வாலின் இரண்டு மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஜன. 26 அன்று டேராடூனுக்குச் சென்றிருந்தார்.

மால்சியில் உள்ள நியூ முசோரி சாலையில் ஃபுட்ஹில் கார்டனில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டபோது அன்று மாலை 4.45 - 5.15 மணிக்குள் அவரது இரண்டு ஐபோன்கள் திருடு போயுள்ளன. இந்த இரண்டு போன்களில் ஒன்று தலைமை நீதிபதியின் பெயரிலும் மற்றொன்று பதிவாளர் அலுவலகத்தின் பெயரிலும் உள்ளது.

தகவலறிந்த காவல்துறையினர் திருமண நிகழ்வு நடக்கும் இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். எனினும் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை.

குஜராத் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மூல்சந்த் தியாகி இதுகுறித்து ராஜ்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.