எங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

யமுனை விவகாரம்: கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்!

யமுனை நதி விவகாரத்தில் கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Published On :

யமுனை நதி விவகாரத்தில் கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியாணா அரசு, யமுனை நதியில் விஷத்தை கலப்பதாக தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தில்லிக்கு தண்ணீா் வழங்கும் யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாகவும் அமோனியா எனப்படும் விஷம் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியதாகவும் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஹரியாணா முதல்வர் நைப் சிங் சைனி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், விஷம் கலப்பதாக பொய் கருத்து தெரிவித்து தில்லி, ஹரியாணா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கேஜரிவால் மீது ஹரியாணா அரசு சோனிபட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மேலும்,  இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதன் அடிப்படையில் அவர், தேர்தல் ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.

இதனிடையே தில்லியில் கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

யமுனை நதி விவகாரத்தில் காங்கிரஸ் இளைஞரணியினர், கேஜரிவாலுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.