
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றது. கர்ஹா கிராமத்தில் கனமழை பெய்துவந்த நிலையில், மழையிலிருந்து தப்பிக்க மக்கள் மேற்கூரையின் கீழ் தஞ்சம் புகுந்தனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானர். மேலும் நால்வர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களின் இருவர் சத்தர்பூரில் உள்ள ஒரு சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களின் நிலை சீராக இருப்பதாகவும், மேலும் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர் பஸ்தி மாவட்டத்தில் உள்ள சௌரி சிக்கந்தர்பூரில் வசிக்கும் ராஜேஷ் கௌஷலின் மாமனார் ஷியாம்லால் கௌஷல்(50) ஆவார்.
நேற்றிரவு அவரது குடும்பத்தினர் பாகேஸ்வர் கோயிலுக்கு காரில் வந்ததாகவும், கோயிலின் மடாதிபதி திரேந்திர சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆசி பெற வந்ததாகவும் கூறினர். வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் குடும்பத்தினர் கோயில் வந்திருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக அவர் கூறினார்.
இதையும் படிக்க: அச்சுதானந்தன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.