
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற ரசாயன ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிகாச்சி மருந்து ஆலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்ற வெடி விபத்தில், 70 சதவிகித தீக்காயங்களுடன் படுகாயமடைந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய தொழிலாளி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 5) பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இன்று காலை நிலவரப்படி விபத்தில் படுகாயமடைந்த 19 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில், மருந்து ஆலையில் மாயமான 9 பேரை தேடி வருகின்றனர். இத்துடன், பலியானோர் உடல்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: ’ஐ.எஸ்.ஐ.’ தரச் சான்று பெற்ற ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.