
நடிகர் கபில் சர்மாவின் புதிதாகத் திறக்கப்பட்ட ஹோட்டலில் காலிஸ்தான் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹோட்டல் திறக்கப்பட்டு சில நாள்கள் ஆன நிலையில், இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளார். இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
கப்ஸ் கஃபே என்று அழைக்கப்படும் இந்த ஹோட்டல் சில நாள்களுக்கு முன்னதாக கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது.
காரில் அமர்ந்திருக்கும் ஒருவர், ஹோட்டலின் ஜன்னலில் 9 முறை துப்பாக்கியால் சுடுவது போன்ற காணொளியில் வெளியாகியுள்ளது. இந்த விடியோ புதன்கிழமை இரவு (கனடா நேரப்படி) எடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலானாய்வு முகமையின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஹர்ஜித் சிங் லட்டியும் ஒருவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவரான விகாஸ் பிரபாகர் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஹர்ஜித் சிங் லட்டி ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.