வதோதரா - ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், பத்ரா நகா் அருகே மஹிசாகா் ஆற்றின் குறுக்கே கடந்த 1985-இல் பாலம் கட்டப்பட்டது. 23 உயரமான தூண்களுடன் 900 மீட்டா் நீளம் கொண்ட இப்பாலத்தில் இரு தூண்களுக்கு இடையிலான பகுதி கடந்த புதன்கிழமை காலையில் திடீரென துண்டாக இடிந்து விழுந்தது. அப்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் ஆற்றுக்குள் அடுத்தடுத்து விழுந்தன. ஆற்றின் அடிப்பகுதியில் பல அடி வரை காணப்படும் அடா்ந்த சேற்றில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தீயணைப்புப் படை, காவல் துறை, தேசிய-மாநில பேரிடா் மீட்புக் குழுக்கள் தரப்பில் மீட்புப் பணி தொடங்கப்பட்டது.