காஷ்மீரில் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை, காவலர்கள் தடுத்து நிறுத்திய நிலையில், அவர் சுவர் ஏறிக் குதித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீநகரில் அமைந்துள்ள தியாகிகன் நினைவிடத்துக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தச் சென்றார். நேற்று அவர் சென்றபோது, தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் காவல்துறையினர், அவரை நினைவிடத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி நுழைவாயிலைப் பூட்டியிருந்தனர்.
நேற்று முதல், வீட்டுக் காவலில் உமர் அப்துல்லா வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நினைவிடத்துக்குச் செல்ல முடியாமல் அவர் தடுக்கப்பட்டதால், உடனடியாக அவர் சுவர் ஏறிக் குதித்து நினைவிடத்துக்குச் சென்று அங்கு அஞ்சலி செலுத்தினார்.
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சுவர் ஏறிக் குதித்துச் செல்லும் விடியோ, இன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. முதலில், அவரைத் தடுத்து நிறுத்திய காவலர்கள், அவர் திடீரென சுவர் ஏறிக் குதிப்பதைப் பார்த்ததும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
தியாகிகள் நாளை முன்னிட்டு, தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதால், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், நினைவிடத்துக்கு வந்தேன். அப்போது, தன்னை காவலர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவே இவ்வாறு செய்யப்படுவதாகக் கூறுகிறார்கள். எந்த சட்டத்தின் கீழ் நான் தடுக்கப்பட்டுள்ளேன் என்று எனக்குத் தெரிவிக்க வேண்டும். இது சுதந்திர நாடு என்று கூறுகிறார்கள். ஆனால், எங்களை அடிமையாகவே வைத்திருக்கிறார்கள். இந்த நினைவிடம் எப்போதுமே இங்குதான் இருக்கிறது. நேற்று தடுத்துவிட்டார்கள். எத்தனை நாள்களுக்குத்தான் தடுத்துவைக்க முடியும் என்றும் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹரியாணா: பள்ளி கூரையின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் காயம்

முதல்வர் விஜய்க்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்து!
எல்லா தந்தைக்கும் இது கிடைப்பதில்லை: எஸ்.ஏ. சந்திரசேகர் நா தழுதழுக்க பேச்சு

சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



