மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இரண்டு கன்றுகள் உள்பட 3 யானைகள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தாலா ரயில் நிலையம் அருகே யானைக கூட்டம் மீது அந்த வழியாக சென்ற ஜன்ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வியாழக்கிழமை இரவு மோதியது. இந்த சம்பவத்தில் இரண்டு யானைக் கன்றுகள் உள்பட 3 யானைகள் பலியானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ஜார்க்கண்டின் டால்மா வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு யானைக் கூட்டம் கடந்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர்கள் மேலும் கூறினர். தலைமை வனப் பாதுகாவலர் எஸ். குழந்தைவே கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். யானைக் கூட்டம் நடமாட்டத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு ரயில்வேக்கு தகவல் அளித்த போதிலும், சோகத்தைத் தவிர்க்க முடியவில்லை.
அப்பகுதி வன அதிகாரி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று அவர் தெரிவித்தார். 3 யானைகள் ரயில் மோதி பலியான நிகழ்வு மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Three elephants, including two calves, were run over by an express train near Banstala railway station in West Bengal's Paschim Midnapore district, police said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44

மேற்கு வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடக்கம்!
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



