ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!

6000mAh பேட்டரி திறன், 50MP கேமரா, சக்திவாய்ந்த புராசஸர் என அனைத்து நிறைவான அம்சங்களும் உள்ளன.
Oppo K13x 5G
ஓப்போ கே 13எக்ஸ் படம் / நன்றி - ஓப்போ
Published on
Updated on
1 min read

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஓப்போ கே 13எக்ஸ் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என ஓப்போ தெரிவித்துள்ளது.

இதில், 6000mAh பேட்டரி திறன், 50MP கேமரா, சக்திவாய்ந்த புராசஸர் என அனைத்து நிறைவான அம்சங்களும் உள்ளன. எனினும் இந்திய பயனர்களைக் கவரும் வகையில், குறைந்த விலையிலேயே ஓப்போ கே 13எக்ஸ் ஸ்மாட்ர்போனை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

அந்தவகையில் சமீபத்தில் இந்த ஆண்டு, கே வரிசை ஸ்மார்ட்போன்களை ஓப்போ அறிமுகம் செய்தது. சமீபத்தில் கே 13எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த ஸ்மார்ட்போன், மக்களின் அன்றாட பயன்பாடுகளுக்குத் தேவையான அம்சங்களை நிறைவாகவே உள்ளடக்கியுள்ளது.

கேமரா தரம் மற்றும் மென்பொருள் போன்றவற்றில் சில குறைபாடுகள் இருந்தாலும், மற்ற அம்சங்களால் இந்த விலைக்கு ஏற்ற தரத்தை ஓப்போ கே 13 எக்ஸ் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • ஓப்போ கே 13எக்ஸ் ஸ்மார்ட்போனானது ஒலி எதிரொலிப்புகள் இல்லாத மேட் வடிவமைப்பு கொண்டது. மிக எளிமையான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் நிலைத்தன்மை வாய்ந்த புற வடிவத்தைக் கொண்டுள்ளது.

  • 6.67 அங்குல எல்.சி.டி. திரை உடையது. பயன்படுத்துவதற்கு சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. திரையின் பிரகாச அளவு 850 nits கொண்டது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6,300 புராசஸர் உடையது.

  • 8GB உள் நினைவகமும் 128GB நினைவகமும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 6000mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100% எட்டலாம்.

  • 194 கிராம் எடை உடையது. பயன்படுத்த எளிதாக இருக்கும்.

  • தூசு மற்றும் நீர் புகாத்தன்மைக்காக IP54 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50MP மெயின் கேமராவும், 2MP ஜூம் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. பகலில் புகைப்படங்கள் எடுக்க உகந்தது. இரவு நேரங்களில் எடுக்கும் புகைப்படங்களில் தரம் குறைந்து காணப்படுகிறது.

  • இந்திய சந்தைகளில் ஓப்போ கே 13எக்ஸ் விலை ரூ. 11,999.

இதையும் படிக்க | ஜூலை 24-ல் அறிமுகமாகிறது ரியல் மீ 15 ப்ரோ! சிறப்பம்சங்கள் என்னென்ன?

Summary

Oppo K13x 5G review: Is it the best mobile phone under ₹12000 with a big battery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com