அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் முதல் விற்பனையகம் மும்பையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) திறக்கப்பட்டது. டெஸ்லா மாடல் ஒய் காரின் சிறப்பம்சங்கள், விலை குறித்து இங்கு பார்ப்போம்.
டெஸ்லாவை இந்தியாவிற்கு கொண்டுவர நீண்ட காலமாக திட்டமிட்டிருந்த ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், இந்தியாவில் ஒரு டெஸ்லா தொழிற்சாலையையும் அமைக்க திட்டமிட்டிருந்தார்.
அவரின் கனவு நனவாகும் படி, டெஸ்லா நிறுவனம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக இந்தியாவில் தன்னுடைய கால் தடத்தை மும்பையில் பதித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் டெஸ்லா நிறுவனம் 24,565 சதுர அடி பரப்பில் முதல் விற்பனையகத்தை திறந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் ரூ.35 லட்சம் வாடகைக்கு இந்த இடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் விற்பனை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், டெஸ்லா நிறுவனம் தற்போது தனது கார்களுக்கான பதிவைத் துவங்கியுள்ளது. ஏற்கனவே மும்பை மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தியுள்ளது.
தானியங்கி முறையில் செயல்படும் டெஸ்லா காரில் தற்போது மாடல் ஒய் மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
16 வண்ணங்கள்!
டீப் புளூ மெட்டாலிக்
ஸ்டெல்த் கிரே
டைமண்ட் பிளாக்
பேர்ல் ஒயிட்
அல்ட்ரா ரெட்
குயிக் சில்வர் உள்ளிட்ட 6 வண்ணங்களில் கிடைக்கின்றன.
2வேகம்
மாடல் ஒய் ரியர்-வீல் டிரைவ், மாடல் ஒய் லாங்-ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் இரண்டு காரும் டாப் ஸ்பீட் 201 கி.மீ. வரை செல்லும்.
30 முதல் 100 கி.மீ வேகம்
0 முதல் 100 கி.மீ வேகத்தை மாடல் ஒய் ரியர்-வீல் டிரைவ் - 5.9 வினாடிகளிலும், மாடல் ஒய் லாங்-ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் - 5.6 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை பெற்றுள்ளது.
415 நிமிட சூப்பர் சார்ஜ்
மாடல் ஒய் ரியர்-வீல் டிரைவ் - 238 கி.மீட்டரும், மாடல் ஒய் லாங்-ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் 267 கி.மீட்டரும் செல்லும்.
5பேட்டரி
ரியர்-வீல் டிரைவ் - 63 கிலோ வாட்
லாங்-ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் - 83 கிலோ வாட்
6ஒரு முறை சார்ஜ் செய்தால்..!
ரியர்-வீல் டிரைவ் - 500 கி.மீ.
லாங்-ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் - 622 கி.மீ
7சிறப்பம்சங்கள்
முன்புறம் 15 அங்குல் தொடு திரையும், பின்பக்கம் 8 அங்குல தொடுதிரையும் உள்ளது.
9 ஸ்பீக்கர்கள்
8 வெளிப்புற கேமராக்கள்
டேஷ்போர்டு கேமரா
முன்பக்கம் பவர் ரெக்லைனர் இருக்கைகள்
8வியக்க வைக்கும் விலையில்..!
அமெரிக்க டாலரில் இதன் விலை 37,490 டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.32 லட்சம். ஆனால், அமெரிக்க பொருளுக்கான 100 சதவிகித வரியுடன் டெஸ்லாவின் மாடல் ஒய் ரியர்-வீல் டிரைவ் விலை அமெரிக்க விலையுடன் இரண்டு மடங்காக சுமார் ரூ.59.89 லட்சமாகவும், மாடல் ஒய் லாங்-ரேஞ்ச் ரியர் வீல் டிரைவ் காரின் விலை ரூ.68 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லாவின் தானியங்கி அம்சம் கொண்ட காரை வாங்க கூடுதலாக ரூ.6 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Tesla Model Y Registration
இதையும் படிக்க : ஜூலை 24-ல் அறிமுகமாகிறது ரியல் மீ 15 ப்ரோ! சிறப்பம்சங்கள் என்னென்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் ராகுலுக்கு நன்றி தெரிவிக்கும் சுவரொட்டிகளை வெளியிட்ட இளைஞர் காங்கிரஸ்!

ஹூண்டாய் இந்தியா கோச்சர் வீக் 2026 - புகைப்படங்கள்

விஐடி மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: 5 ஆண்டுகளில் ரூ.45 கோடியாக உயா்த்த இலக்கு
ரூ. 940 லட்சம் கோடி சம்பாதிப்பது சாத்தியம்தான்: எலான் மஸ்க்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



