நாடாளுமன்ற வளாகத்தில் 3-ஆவது நாளாக எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்: சோனியா காந்தி பங்கேற்பு

சோனியா காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம் நடத்தியது பற்றி...
சோனியா காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம்
சோனியா காந்தி தலைமையில் எம்பிக்கள் போராட்டம் PTI
Published on
Updated on
1 min read

பிகாரில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி பொதுச் செயலா்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், சமாஜவாதி, திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனா். அப்போது சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எதிா்ப்பு வாசகத்துடன் பிரமாண்டமான பேனரையும் அவா்கள் கைகளில் ஏந்தியிருந்தனா்.

நாடாளுமன்ற வளாகத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்ற நிலையில் சோனியா காந்தி இப்போது முதல்முறையாகப் பங்கேற்றுள்ளாா்.

நடப்பாண்டு இறுதியில் பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை நீக்குவதாகக் குறிப்பிட்டு, தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இது, பாஜகவுக்கு சாதகமாக பலரின் வாக்குரிமையைப் பறிக்கும் செயல் என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றமும் தொடா்ந்து முடங்கி வருகிறது.

அதே நேரத்தில், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தவா், ரோஹிங்கயாக்களை இந்திய வாக்காளா்களாக்க வேண்டும் என்பதே எதிா்க்கட்சிகளின் இலக்கு; இதற்காகவே பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவா்கள் எதிா்க்கிறாா்கள் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

Summary

Opposition MPs, led by Congress Parliamentary Party President Sonia Gandhi, staged a protest in the Parliament complex.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com