திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அம்மாவுக்கு புது வீடு கட்டி பரிசளித்த நடிகை சோனியா சுரேஷ்!

பெற்றோருக்கு நடிகை சோனியா சுரேஷ் புதிய வீடு கட்டி பரிசளித்தது குறித்து...

News image

புதிய வீட்டில் தாய் உடன் நடிகை சோனியா சுரேஷ் - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :4 பிப்ரவரி 2026, 5:04 pm IST

நடிகை சோனியா சுரேஷ் புதிதாக வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளார். அந்த வீட்டை தனது தாய் - தந்தைக்கு பரிசாக அளித்துள்ளார்.

தனது சகோதரியுடன் சேர்ந்து புதிய வீட்டைக் கட்டியுள்ள சோனியா சுரேஷ், முழுக்க முழுக்க தனது உழைப்புக்கு கிடைத்த பரிசு எனக் குறிப்பிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு புது வசந்தம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரின் நாயகியாக சோனியா சுரேஷ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஷியாம் ஜி நடிக்கிறார்.

புது வசந்தம் தொடரில்...

புது வசந்தம் தொடரில்... - படம் - எக்ஸ்

2023 முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் நடித்து வருவதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சோனியா சுரேஷ், சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்.

வசீகரமான தோற்றத்தாலும் குடும்பப்பாங்கான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், தெலுங்கில் உப்பென்னா என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே நடிப்புத் துறையில் இருந்து வந்தாலும் இடையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கச் சென்றார். பின்னர் படிப்பை முடித்த பிறகே மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில், தனது நீண்ட நாள் கனவாக இருந்த சொந்த வீட்டை சோனியா சுரேஷ் கட்டி முடித்துள்ளார். இதன் புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த வீட்டை தனது பெற்றோருக்கு பரிசளிப்பதாக சோனியா குறிப்பிட்டுள்ளர்.

புதிய வீட்டில் குடும்பத்துடன் சோனியா சுரேஷ்

புதிய வீட்டில் குடும்பத்துடன் சோனியா சுரேஷ் - படம் - இன்ஸ்டாகிராம்

புது வீட்டில் பெற்றோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் சோனியா பகிர்ந்துள்ளார். சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Actress Sonia Suresh built a house and gifted it to her mother

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.