நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ஊர்க்காவல்படைத் தேர்வில் மயங்கி விழுந்த பெண்! ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

ஊர்க்காவல்படைத் தேர்வின்போது மயங்கிய பெண்ணை ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப்படம்

Updated On :26 ஜூலை 2025, 4:16 pm IST

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், ஊர்க்காவல் படைத் தேர்வின்போது மயங்கி விழுந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

புத்த கயா பகுதியில், ஜூலை 24ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகவும், ஊர்காவல் படைத் தேர்வுக்கு உடற்தகுதித் தேர்வின்போது 29 வயது பெண் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், உடல்தகுதி தேர்வின்போது, பெண் மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்.

ஆம்புலன்ஸில், தான் மயக்கமுற்று இருந்தபோது, சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் குற்றம்சாட்டியிருக்கிறார். பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் இருவரும் செய்துசெய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் வன்கொடுமையை உறுதி செய்திருக்கிறார்கள். குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் திருப்தியில்லை என்றும் மேற்கொண்டு தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிகாரில் இதுபோன்ற சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கு உதாரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.