
தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவினர் நேரில் சந்தித்துள்ளனர்.
நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவிலான, அந்நாட்டின் எம்.பிகள் இந்தியா வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தலைநகர் தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை அவர்கள் இன்று (ஜூலை 30) நேரில் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கு இடையிலான பன்முகத் துறைகளின் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேபாள அனைத்துக் கட்சிக் குழுவுடனான, இந்தச் சந்திப்பானது அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலியின் இந்தியப் பயணத்துக்கு முன்னதாக அமைந்துள்ளது.
கடந்த, ஜூலை 27 ஆம் தேதியன்று, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சகம், பிரதமர் ஒலி, வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மக்களவையில் எதிரொலித்த வயநாடு விவகாரம்: சீரமைப்பில் மத்திய அரசு மெத்தனப்போக்கு! -பிரியங்கா
An all-party delegation from Nepal met Union Foreign Secretary Vikram Misri in person in Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.